ETV Bharat / state

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Nov 14, 2019, 7:53 PM IST

தேனி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று, உத்தமபாளையம் வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

protest

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வு ஊதியம், 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டமாந்துறை என்ற இடத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சலவைத் தொழிலாளர்கள் வழிபட்டு வரும் கோயில்களான நாகம்மாள் கோயில், கருப்பசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களின் இடங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அந்த இடத்தை சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் செய்யும் தொழிலாளர்கள் சங்கத்தினர்

அப்போது, சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உத்தமபாளையம் வட்டாட்சியரிடம் சென்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் உத்தமபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக்கோரி இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

Intro: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று உத்தமபாளையம் வாட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
Body: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்டம் உத்தமபாளைம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வு ஊதியம், 100நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோசங்களை எழுப்பினர்.
         மேலும் கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டமாந்துறை என்ற இடத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக சலவைத் தொழிலாளர்கள் வழிபட்டு வரும் கோவில்களான நாகம்மாள் கோவில், கருப்பசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களின் இடங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அந்த இடத்தை சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
         முன்னதாக உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக சென்ற விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததும் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உத்தமபாளையம் வட்டாச்சியரிடம் சென்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
         
Conclusion: விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் உத்தமபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.