மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா துறைமுகத்திற்கு பாரதிய ஜனசங்கம் கட்சியின் (தற்போதைய பாஜக) நிறுவனர் சியமா பிரசாத் முகர்ஜியின் பெயரை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி சூட்டினார். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் தேனி மாவட்டத்தில் உள்ள அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட இடங்களில் நேற்று (ஜூன் 19) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கொல்கத்தா துறைமுகத்திற்கு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்ட வேண்டும் என்றும், சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...'இனி தண்ணீர் லாரி வந்தவுடன் ஓட வேண்டியதில்லை' - குடிநீர் வாரியத்தின் முயற்சிக்கு சென்னைவாசிகள் வரவேற்பு!