தேனி: அமமுகவின் ஆலோசனைக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், 'இன்று என்னுடன் இருப்பவர்கள் அம்மாவின் தொண்டர்கள். ஆனால் நம்மால் பலன் பெற்ற சிலர் இன்று சட்டப்போராட்டங்கள் நடத்துகிறார்கள். சிலர் நமது எதிர்க்கட்சியான திமுகவில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.
நாம் ஒன்றும் ஆளும் கட்சி கிடையாது. எதிர்க்கட்சியும் கிடையாது. நம்மிடம் பண மூட்டையும் கிடையாது. ஆனால் நாம் போலீஸை கண்டு ஓடி ஒளியும் நிலையில் இல்லை.
பிசினஸ் கட்சி போல அதிமுக கட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இவர்களோடு பயணிக்க முடியாது என்று தான் தனி கட்சி தொடங்கினோம். நாம் இதே எழுச்சியோடு தமிழ்நாட்டில் விபத்தில் ஆட்சியைப் பிடித்தவர்களை அப்புறப்படுத்துகிற இயக்கமாக மாறுவோம். இதுபோல் பதவிக்காக அங்கே அடிதடி சண்டை நடக்கும் அவர்களோடு பயணித்து தமிழ்நாட்டின் வரலாற்று பக்கத்தில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தனிக்கட்சி தொடங்கினோம்.
நான் துரோகிகளோடு என்றும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். எந்த தவறுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு என்றுமே மன்னிப்பு கிடையாது. அவர்கள் தண்டனை அனுபவிக்கும் காலம் விரைவில் வரும். திமுக திருந்தும் என்று வாக்களித்தோம். ஆனால் திமுக திருந்த மாட்டார்கள் என்று மக்கள் உணர்ந்து உள்ளனர்’ என்றார்.
இதையும் படிங்க:டிஏபி உரத்திற்கு மாற்றாக பாஸ்பேட் உரங்களை பயன்படுத்துங்கள் – விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்