ETV Bharat / state

அதிமுகவில் மீண்டும் போஸ்டர் யுத்தம்! - அதிமுகவில் மீண்டும் போஸ்டர் யுத்தம்

எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ளார் என ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

போஸ்டர் யுத்தம்
போஸ்டர் யுத்தம்
author img

By

Published : Jun 6, 2022, 4:05 PM IST

தேனி: அதிமுகவில் சமீபகாலமாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றொருபுறம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள் மிகப்பெரிய கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அதிமுகவின் ஒற்றை தலைமை, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட விவாதங்களையும் பங்களிப்பையும் ஏற்படுத்தும் விதமாக இருதரப்பு ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

இந்த போஸ்டர்கள் யுத்தம் தற்போது நின்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கட்சியில் மீண்டும் விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் விரைவில் அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்ற உள்ள எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.

போஸ்டர் யுத்தம்

இந்த போஸ்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு செல்லும் தெருக்களிலும் அதேசமயம் அவரது மகன் ரவீந்திரநாத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் அருகிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர்கள் ஒட்டிய சுரேஷ் என்பவர் குறித்து விவரங்களை அதிமுக நிர்வாகியிடம் கேட்டபோது, அவர் அமமுக கட்சியை சேர்ந்தவர் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கூகுள் பே மூலம் பஸ் டிக்கெட் எப்போது?.. போக்குவரத்து அமைச்சர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.