தேனி: பெரியகுளம் அருகே குள்ளபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முதலாம் ஆண்டு படித்து வந்து உள்ள நிலையில், நேற்று (டிச.19) மாலை, மாணவனை கல்லூரியின் விவசாய வளாகத்தில் உள்ள கிணற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்டு உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின் மாணவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லூரி நிர்வாகத்தினரிடமும், சக மாணவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார், மாணவர் உயிரிழந்த கிணறு ஆழம் குறைவாக உள்ள நிலையில், மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளாரா? அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கில் மாணவரை கிணற்றில் தள்ளிவிட்டனரா உள்ளிட்ட பல கோணங்களில் ஜெயமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேளாண் கல்லூரி மாணவன் கல்லூரி வளாகத்தில் உள்ள கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: காவல்துறையினருக்கு உதவியாக குற்றவாளியை தேடிச் சென்ற நபர் மர்மமான முறையில் மரணம்!