ETV Bharat / state

தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கு - பணம் விரைந்து கிடைக்க நடவடிக்கை - தேனியில் தனியார் நிதி நிறுவனம் மோசடி

தேனி: உத்தமபாளையத்தில் இயங்கிவந்த தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், அவர்களது உறவினர்களின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளைக் கணக்கிட்டு பாதிப்படைந்தவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.

theni district news
private chit fund fraud
author img

By

Published : Nov 2, 2020, 6:25 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உதயநிலா சிட்பண்ட்ஸ் மற்றும் உதயம் பைனான்ஸ் ஆகிய தனியார் நிதி நிறுவனங்கள் செயல்பட்டுவந்தன.

இதன் மேலாண்மை இயக்குநர், கூட்டாளியாக இருந்துவந்த அஜீஸ்கான் என்பவர் கடந்த ஜூலை மாதம் இறந்துவிடவே, தற்போது நிதிநிறுவனத்தை நடத்திவரும் பங்குதாரரான ஜமால்தீன் பொதுமக்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய முதலீட்டுத் தொகையை தர மறுத்து தலைமறைவாகிவிட்டார்.

இதனால் இந்த நிதி நிறுவனங்களில் சுமார் ரூ.23 கோடி வரையில் முதலீடு செய்திருந்த உத்தமபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் நாகலட்சுமி இந்த வழக்கை விசாரித்துவந்தார்.

இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன் விசாரணையை துரிதப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகப் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கூறி முதலீடு செய்திருந்த பொதுமக்கள் நிதி நிறுவன உரிமையாளர் அஜீஸ்கான் இல்லத்தை முற்றுகையிட்டு சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து காவல் துறை, பாதிப்படைந்த பொதுமக்களுக்கிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (நவ. 3) நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விசாரணை அலுவலரான திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு, நிதி நிறுவனத்தில் முதலீடுசெய்து பாதிப்படைந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் உதயநிலா நிதி நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துரிதமாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுப்பது குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் செலுத்திய பணம் குறித்தும், அதற்கான உரிய ஆவணங்களைக் கொண்டும் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஏராளமானோர் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, "பொதுமக்களின் புகாரை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர்கள், அவரது உறவினர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகின்றது.

விசாரணையின் முடிவில் அவர்களது பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளைக் கைப்பற்றி அதனைக் கணக்கிட்டு முழுமையாக விசாரணை நடத்தி பின், மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பாதிப்படைந்தவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.