ETV Bharat / state

திடீரென அதிவேகமாக வந்த கார் டயர் - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்! - ஸ்டெப்னி டயர் 3 பேர் மீது விழுந்த தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது

மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் வேகத்தடையில் ஏறி இறங்கியதால், காரின் மேல்பகுதியில் இருந்த ஸ்டெப்னி டயர் 3 பேர் மீது விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

திடீரென அதிவேகமாக வந்த கார் டயர்-நொடியமைக்கும் நேரத்தில் விபரிதம்

author img

By

Published : May 30, 2022, 9:09 PM IST

தேனி: மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டியை அடுத்து கானா விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனைக்கு தினமும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வந்து செல்வதால் எப்போதும் மருத்துவக்கல்லூரி முன்பு மக்கள் கூட்டம் காணப்படும்.

மேலும் தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்கும்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இந்த விபத்துகளை குறைப்பதற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக இரண்டு புறங்களிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக உயரமான வேகத்தடைகள் தார் கலவை கொண்டு அமைக்கப்பட்டது.

கானாவிலக்கு மருத்துவமனை முன் எரியாத மின் விளக்குகள்:இரவில் இந்த வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு நன்குதெரியும் வகையில் வேகத்தடைக்கு அருகிலேயே உயர்மின் கோபுர விளக்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களாக இந்த உயர்மின் கோபுர விளக்குகள் பழுதடைந்ததால் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வரும் வேகத்திலேயே ஏறி இறங்கி தாவி சென்று வருகின்றது.

பறந்து வந்து தாக்கிய டயர்: இதனால் சாலையைக் கடக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலைத் தருகிறது. இந்நிலையில் நேற்று(மே29) இரவு தேனியில் இருந்து மதுரை சென்ற டவேரா கார் ஒன்று அதிவேகத்தில் வேகத்தடை இருப்பது தெரியாமல் ஏறி இறங்கி, தாவி கடந்து சென்றது. வேகத்தடையை கடந்து செல்லும்போது ஏற்பட்ட அதிர்வு மற்றும் கார் தாவிச்சென்றதால் காரின் மேல்புறம் வைக்கப்பட்டிருந்த ஸ்டெப்னி டயர், காரில் இருந்து பறந்து, கீழே விழுந்து சாலையோரம் தேநீர் கடை முன்பு நின்று, பேசிக்கொண்டிருந்த மூன்று பேரின் மீது விழுந்தது.

இதில் கானாவிலக்கு பிஸ்மி நகரைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா உள்ளிட்ட இரண்டு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காரிலிருந்து ஸ்டெப்னி டயர் பறந்து விழுந்தது தெரியாமல், அந்த காரை ஓட்டியவர் அவ்விடத்தை விட்டு கடந்து சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திடீரென அதிவேகமாக வந்த கார் டயர்-நொடியமைக்கும் நேரத்தில் விபரிதம்.

பெரிய அளவில் காயங்கள் ஏற்படாததால் சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காததால் போலீசார் வழக்குப்பதிவு ஏதும் செய்யவில்லை. இருப்பினும் கானா விலக்கு போலீசார் சம்பந்தப்பட்ட வேகமாக சென்ற காரை கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:சென்டர் மீடியனில் மோதிய கார்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.