ETV Bharat / state

காதலித்து திருமணம் செய்து கைவிட்ட இளைஞர்; தற்கொலை மிரட்டல் விடுத்த திருநங்கை; தேனியில் நடந்தது என்ன? - transgender

தேனி மாவட்டம் கம்பத்தில் தன்னை இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கைவிட்டதாக கூறி திருநங்கை ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 18, 2023, 4:18 PM IST

தற்கொலை மிரட்டல் விடுத்த திருநங்கை வின்சி

தேனி: திருச்சி மாநகரைச் சார்ந்தவர் வின்சி (26). திருநங்கையான இவர் திருச்சியில் தனது வீட்டை விட்டு வெளியேறி தேனி மாவட்டத்திற்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. தேனி பகுதியில் தனது உறவினர் இல்லங்களில் இருந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கம்பத்திற்கு வந்துள்ளார். அங்கு உள்ள பால் பண்ணை ஒன்றில் வின்சி பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த பால்பண்ணைக்கு வந்து சென்ற கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சார்ந்த ஐயப்பன் என்பவரது மகன் அறிவு (26) என்பவர் வின்சியிடம் நட்பாக பழக்கியுள்ளார்

பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்து வின்சியை, அறிவு திருமணம் செய்து கொண்டு காமைய கவுண்டன்பட்டியில் உள்ள தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இளைஞர் அறிவின் தொழிலுக்காக வின்சி பல்வேறு பகுதிகளில் இருந்து கடன் பெற்று அறிவுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அறிவுக்கும், வின்சியிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, தற்போது இளைஞர் அறிவு வின்சியை சந்திப்பதை தவிர்த்துள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த வின்சி இரண்டு தினங்களுக்கு முன்பாக கம்பம் காவல் நிலையத்தில் அறிவுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார். இந்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த சூழலில் இன்று கம்பம் கூடலூர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இருந்த செல்போன் கோபுரம் (Cell phone tower) ஒன்றின் மீது திடீரென வின்சி பெட்ரோல் கேனுடன் மேலே ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கம்பம் காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கோபுரத்தின் மீது ஏறி இருந்த வின்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர் உடனடியாக தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய அறிவு இங்கு வர வேண்டும் அவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கையை எழுப்பினார். எனினும் அவர் கோபுரத்தை விட்டு கீழே இறங்காததால் தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். "சம்பந்தப்பட்ட நபர் அறிவினை உடனடியாக அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் விசாரணையில் நீங்கள் கூறியது உறுதியாகும் பட்சத்தில் இருவரையும் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தொடர்ந்து காவல்துறையினர் வின்சியிடம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து வின்சி செல்போன் கோபுரத்தின் மேலிருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டிருந்ததால் தண்ணீரை ஊற்றி அவரது உடைகளை ஈரமாக்கினர். மேலும் வின்சியை விசாரிப்பதற்காக கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். திடீரென திருநங்கை ஒருவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: Arikomban statue: கேரளாவில் அரிக்கொம்பனுக்கு 8 அடி உயர சிலை - நன்றி காட்டும் அன்பர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.