ETV Bharat / state

தேனி-திண்டுக்கல் சாலையில் லாரியும் அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி; 6 பேர் படுகாயம் - accident

தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போடப்பட்ட தடுப்புகளை முந்திச் சென்ற அரசுப் பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதிய நிலையில், லாரின் பின்னால் வந்த இரு கார்களும் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் 6 பேர் காயம் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

accident
தேனி-திண்டுக்கல் சாலையில் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து
author img

By

Published : Aug 11, 2023, 10:36 AM IST

தேனி-திண்டுக்கல் சாலையில் லாரியும் அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காட்ரோடு பகுதியில் மாவட்ட எல்லைச் சோதனை சாவடி அமைந்து உள்ளது. இந்த சோதனைச் சாவடியில், வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக போடப்பட்ட தடுப்புகளை முந்தி சென்ற மதுரையில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து, எதிரே திண்டுக்கல் நோக்கி மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் லாரியின் முன்பக்கம் முற்றிலுமாக சிதைந்தது. இந்த நிலையில் லாரி ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தார். இதைக்கண்ட சோதனைச் சாவடியில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், இடிபாடுகளுக்குள் சிக்கியதால் லாரி ஓட்டுநரை நீண்ட நேரம் போராடியும் மீட்க முடியவில்லை. இறுதியில், ஓட்டுநர் பலியான நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து, தேவதானப்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், இந்த விசாரணையில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் உடுமலைப்பேட்டை தாலுகா மடத்துக்குளத்தைச் சேர்ந்த அருண்குமார் (30) என்பது தெரிய வந்தது. அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானபோது, லாரியின் பின்னால் வந்த கார்கள், அடுத்தடுத்து மோதியதால், காரில் பயணித்த இரண்டு நபர்கள் மற்றும் பேருந்தில் பயணித்த நான்கு நபர்கள் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்து இரண்டு கார்களும் விபத்துக்குள்ளானதால் தேனி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலானதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மணப்பாறையில் பாஜகவினர் திடீர் சாலை மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.