ETV Bharat / state

தேனியில் தேசிய அளவிலான 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு தொடக்கம்!

தேனி: தேசிய அளவிலான ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கிவைத்தார்.

தேனியில் தேசிய அளவிலான 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு தொடக்கம்!
author img

By

Published : Nov 2, 2019, 9:07 AM IST

நம் நாட்டில் வீடுகள், சாலையோரம், நிரந்தரமற்ற இடங்களில் நடைபெறும் முறைப்படுத்தப்படாத தொழில்கள், நிலையான அமைவிடங்களிலுள்ள நிறுவனங்களில் நடைபெற்றுவரும் முறைப்படுத்தப்பட்ட தொழில்கள் ஆகியவைகளும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது குறித்த பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு, அதனை பொது சேவை மையம் மூலம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை ஆறாவது முறை பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. ஏழாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணியினை தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி ஆளுநரால் தொடங்கிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குள்பட்ட பகதிகளுக்கான பணியினை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று தொடங்கிவைத்தார்.

தேனியில் தேசிய அளவிலான 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு தொடக்கம்!

2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பின்போது சுமார் 75 ஆயிரத்து 97 நிறுவனங்கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பொது சேவை மையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட கணக்கெடுப்பாளார்கள், தேனி மாவட்டத்திலுள்ள, 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 8 ஒன்றியங்களுக்குள்பட்ட 130 ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கும் நேரில் சென்று அங்கு நடைபெறும் தொழில்கள் குறித்த விவரங்களைச் சேகரித்தனர்.

Intro: தேனி மாவட்டத்தில் தேசிய அளவிலான 7வது பொருளாதாரக் கணக்கெடுப்பு - 2019 பணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
Body: நம் நாட்டில் வீடுகள் மற்றும் சாலையோரம், நிரந்தரமற்ற இடங்களில் நடைபெறும் முறைப்படுத்தப்படாத தொழில்கள், நிலையான அமைவிடங்களிலுள்ள நிறுவனங்களில் நடைபெற்று வரும் முறைப்படுத்தப்பட்ட தொழில்கள் ஆகியவைகளும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது குறித்த பொருளாதாரக் கணக்கெடுப்புப்பணி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு, அதனை பொது சேவை மையம் மூலம் மூலம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இதுவரை 6முறை பொருளாதார கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. 7வது பொருளாதார கணக்கெடுப்பு பணியினை தமிழகத்தில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி ஆளுநரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகதிகளுக்கான பணியினை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று துவக்கி வைத்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற 6வது பொருளாதாரக் கணக்கெடுப்பின் போது சுமார் 75,097 நிறுவனங்கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பொது சேவை மையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட கணக்கெடுப்பாளார்கள், தேனி மாவட்டத்திலுள்ள, 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் மற்றும் 8ஒன்றியத்திற்குட்பட்ட 130 ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் நேரில் சென்று அங்கு நடைபெறும் தொழில்கள் குறித்த விவரங்களைச் சேகரிப்பார்கள்.
இது குறித்து ஆட்சியர் தெரிவிக்கையில், பொருளாதாரக் கணக்கெடுப்பானது, பொருளாதாரத்தில் திட்டமிடுதல் நோக்கத்திற்காகவும், பொருளியலின் பல்வேறு துறைக் கூறுகளின் பங்களிப்பினை கணிப்பதற்காகவும் நடத்தப்படுகிறது. மேலும் மாநிலம் மற்றும் மாவட்டத்திலுள்ள பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத (Organised and Un-organised sectors) நிறுவனங்களைக் கணக்கிட்டு விரிவான பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.
இக்கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு அவர்கள் கோரும் விவரங்களான குடும்பத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கை, பெயர், வயது, சமூகப்பிரிவு, பாலினம், தொழில் நடந்தால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை விவரம், கடன்தொகை, மூலதனம், உற்பத்தி விவரம், வருமானவரி அட்டை எண் (PAN Card No) ஆதார் அட்டை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை துல்லியமாக வழங்கிட வேண்டும்.
மேலும், பெறப்படும் தகவல்களை செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பாளர்கள் பதிவு செய்வார்கள். இத்தகவல்கள் பதிவு செய்த அன்றே மத்திய புள்ளிஇயல் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். இதற்கென தகவல்களைப் பதிவு செய்யும் கணக்கெடுப்பாளர்களுக்கு தனி கடவுச்சொல் (Password) கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் இரகசியமாக பேணப்படும்.
Conclusion: கணக்கெடுப்பாளர்கள் பதிவு செய்யும் தகவல்களை முதல் நிலை மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்பட்டு பின்னர் அவற்றை இரண்டாம் நிலை மேற்பார்வையாளர்கள் மூலம் சரிபார்த்தபின் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இரண்டாம் நிலை மேற்பார்வையாளர்களாக அரசு அலுவலர்கள் செயல்படுவார்கள். எனவே பொதுமக்கள் தங்களை நாடி வரும் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு துல்லியமான தகவல்களை அளிப்பதன் மூலம் மாவட்ட மற்றும் மாநில வளர்ச்சிக்கான திட்டமிடலுக்கு உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.