ETV Bharat / state

தேனியில் கரோனாவிற்கு 2ஆவது உயிரிழப்பு!

author img

By

Published : May 22, 2020, 3:32 PM IST

தேனி: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த முதியவர் ஒருவர் இன்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதன்மூலம் கோவிட்-19ஆல் தேனியில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

70 year old corona patient died in theni

தேனி மாவட்டத்தில் இதுவரை 96 பேர் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும், போடி மாவட்டத்தைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சின்னமனூர் அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். கோயம்பேட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தவருடன் தொடர்பில் இருந்ததையடுத்து இவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, கடந்த 10ஆம் தேதிமுதல் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

குழாய்கள் உதவியுடன் உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டிருந்த இவர், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரைப் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க: அடுத்தடுத்து உயிரிழப்பு - பொதுமக்கள் அச்சம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.