தேனி: பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்காக தர்மராஜ் என்பவரது வீட்டிற்கு அவரது உறவினர்களான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், பாபு, மற்றும் பன்னீர் ஆகிய மூவரும் குடும்பத்தினருடன் திருவிழாவுக்கு வந்து உறவினர் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலையில் பன்னீர்செல்வம் என்பவருடன் சபரிவாசன், மணிமாறன், ருத்ரன் மூன்று சிறுவர்களும் சேர்ந்து கண்மாய்கள் குளிக்கச் சென்றனர். அப்போது மூன்று சிறுவர்களும் ஆழமான பகுதி என தெரியாமல் நீரில் இறங்கிய பொழுது நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனை அறிந்த உடன் சென்ற பன்னீர்செல்வம் நீரில் மூழ்கும் சிறுவர்களைக் காப்பாற்ற முயற்சித்தார். அவரும் நீரில் குதித்துள்ளார். மேலும் நீரில் குதித்த பன்னீர் செல்வத்திற்க்கும் நீச்சல் தெரியாத நிலையில் நால்வருமே நீரில் மூழ்கி உள்ளனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ருத்திரன் என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். மற்ற மூவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இருந்தபோதும் நால்வரையும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதில் சிறுவன் ருத்ரன் மட்டும் மூச்சுத் திணறலுடன் இருந்து வந்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ரமேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கண்மாயின் நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் பலியான சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி சான்றிதழ்: மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்ற பெண் கைது