ETV Bharat / state

தேனி: ஒரே நாளில் 278 பேருக்கு கரோனா பாதிப்பு, 7 பேர் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 278 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 பேர் உயிரிழந்தனர்.

Theni medical college
தேனி மருத்துவக் கல்லூரி
author img

By

Published : Aug 5, 2020, 10:27 PM IST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலக தற்காலிக பெண் பணியாளர், மாவட்ட கருவூலத்துறை அலுவலக கணக்காளர் மற்றும் சிப்காட்டில் பணியாற்றும் முதுநிலை அலுவலர் உள்பட 278 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இன்று (ஆகஸ்ட் 5) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வைரஸ் தொற்று பாதிப்படைந்தவர்கள் பணிபுரிந்து வந்த அலுவலகங்களை நகராட்சியினர் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். பின்னர், அந்த அலுவலகங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டன.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 539ஆக உயர்ந்துள்ளது. மேலும் தேவாரத்தை சேர்ந்த 31 வயது பெண், 80 வயது முதியவர், சில்வார்பட்டியை சேர்ந்த 66 வயது முதியவர், தேனியைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, 65 வயது முதியவர், வடுகபட்டியைச் சேர்ந்த 61 வயது முதியவர் மற்றும் பெரியகுளத்தை சேர்ந்த 50 வயதுடைய நபர் என 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதன் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் அதிகபட்சமாக தேனியில் 85 பேர், பெரியகுளத்தில் 64 பேர், போடியில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று கண்டறியப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என இன்று மட்டும் 2 ஆயிரத்து 83பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போது வரை 3 ஆயிரத்து 792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 668 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிங்க: பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.