ETV Bharat / state

ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணை நிரம்பியது...14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் 14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையை பார்வையிடும் ஆட்சியர் தர்ப்பகராஜ்
ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையை பார்வையிடும் ஆட்சியர் தர்ப்பகராஜ் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

திருப்பத்தூர்: ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் 14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணை 26 வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆண்டியப்பனூர் அணையை இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், "திருப்பத்தூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை இருந்தபோதிலும் கூட ஆண்டியப்பனூர் அணையில் இருந்து வெளியேறும் உபரநீரால் பாம்பாறு அணை அருகே இருக்கும் 14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்படுகிறது," என்று தெரிவித்தார்.

மழை நீரில் கழிவு நீர் கலப்பு: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் அப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.அந்த கால்வாய் செல்லக்கூடிய இடத்தை பொதுமக்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் தேங்கி நின்றது.

இதையும் படிங்க: "விழுப்புரத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ மழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அது மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசுவதோடு கொசுதொல்லை அதிகமாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இன்று திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்தை சிறைப்பிடித்து திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பேருந்து தனியார் பேருந்து கல்லூரி பேருந்து என அனைத்தும் சாலையில் நின்றதால் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றனர்.

பாம்பாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி பகுதியின் வழியாக பாம்பாறு செல்கிறது.இந்த பாம்பாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலம் சுமார் 50வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இதன் வழியாக மட்றப்பள்ளி,மேற்கத்தியானூர்,குமரன் நகர், மற்றும் ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதிகளில் உள்ள 18கிராமங்களுக்கு தினமும் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து, இருசக்கர வாகனம் மூலமாக பயணித்து வருகின்றனர்.

இதனையடுத்து மழைகாலங்களில் வருடந்தோறும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே மேம்பாலம் அமைத்து தரக்கோரி பலமுறை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனு அளித்து உள்ளனர். ஆனாலும் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அந்த சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதியில் உள்ள 18 கிராமங்கள் உள்ளிட்ட 23கிராம பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு சுற்றி மாற்று பாதைகள் வழியாக தங்களின் சொந்த பகுதிகளுக்கு சென்று வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மழைநீரில் நெற்பயிர் மூழ்கியுள்ளது: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெற்பயிர் முழுவதும் மழைநீரில் மூழ்கியுள்ளது.இதனால் நிலத்தில் பயிரிட்டிருந்த நெற்பயிர் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "சோமலாபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிரிகள் பேதமடைந்துள்ளதாகவும் இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,"என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.