தேனி: திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மினி வேனில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற வேன் தேனி அருகே உள்ள ஆதிபட்டி புறவழிச்சாலையில் சென்ற எதிரே கேரளாவில் இருந்து சிதம்பரம் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் இரண்டு வேன்களும் அப்பளம் போல் நொறுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேனில் இருந்தவர்களை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக தேனி புறவழிச்சாலையில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. புறவழிச்சாலையில் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் திரும்பிய போது எதிரே வந்த வேன் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வீடியோ: தேனியில் ஐயப்பனுக்கு 2,000 குத்துவிளக்கு பூஜை