திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளயத்தைச் சேர்ந்தவர் போஸ். 2011ஆம் ஆண்டு இவரது மகன் முரளிதரன்(19) தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் உயர்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வாங்கிவிட்டு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
கம்பத்திலிருந்து தேனி நோக்கி சென்ற அந்த அரசுப் பேருந்தின் பின்புறம் வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த முரளிதரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக போஸ் சார்பில் பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பெரியகுளம் அரசுப் போக்குவரத்துக்கழகம் இழப்பீடாக ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து ரூ.12 லட்சத்து 20 ஆயிரத்து 703 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் இரண்டு அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், பெரியகுளம் அரசுப் போக்குவரத்து பணிமனையிலிருந்து மதுரை புறப்படுவதற்கு தயராக இருந்த 2 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற அமீனா ரமேஷ் ஜப்தி செய்து நீதிமன்றம் கொண்டு சென்றார்.
நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசு பேருந்துகள் ஜப்தி – நீதிமன்றம் நடவடிக்கை
தேனி: விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.12லட்சம் இழப்பீடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.