தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசூரன். கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் இவர், தனது வீட்டில் உள்ள கொட்டத்தில் இன்று (மே 16) வழக்கம் போல் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக கொட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர், அக்கம் பக்கத்தினர் எனப் பலரும் தீயை அணைக்க முயன்றும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து ஆண்டிபட்டி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. காற்றின் வேகத்தால் தீயணைப்புத் துறையினர் வரும் முன்பே கொட்டத்தில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் தீக்கிரையாகி பலியாகின. ஒரு சில ஆடுகள் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.
இதனிடையே தீயை அணைக்க முயற்சி செய்த விவசாயி வீரசூரனும் படுகாயமடைந்தார். இச்சம்பம் தொடர்பாக ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுவையாக உணவு தயாரித்து சேவை மனப்பான்மையுடன் வழங்குங்கள்' - அமைச்சர் அறிவுரை!