நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஒசட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலி வேலை தொழிலாளி ரிசோரியா (25). இவரது தந்தை சார்லஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், ரிசோரியாவின் தாய் இந்திரா, ராஜேந்திரன் (58) என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ரிசோரியா தினந்தோறும் குடித்து விட்டு, வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது வழக்கம்போல் நேற்று (ஆக.03) குடித்து விட்டு தாயிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கோடாரியால், அவரை கழுத்தில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரிசோரியா உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடர்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தாய் இந்திரா, ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: எரிந்த நிலையில் கிடந்த சடலம் - தொடர் கொலைகளால் பொதுமக்கள் அச்சம்