கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி பசவன் காலனியைச் சேர்ந்தவர் சிவன் (23). இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விறகு சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். மாலை வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வனப்பகுதி முழுவதும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான புல்பள்ளி வனப்பகுதிக்குள் முட்புதருக்குள் சிவனின் உடல் முழுவதும் தின்று தீர்க்கப்பட்ட நிலையில் தலை, கை, கால்கள் மட்டும் கிடந்துள்ளன.
அந்த வனப்பகுதியானது கிராமத்திற்கு அருகில் உள்ளது. ஆகையால், சிவனை அடித்துக் கொன்ற புலி எந்த நேரத்திலும், கிராமத்திற்குள் வந்து மக்களைத் தாக்கும் அச்சம் உள்ளதால், உடனடியாக அந்தப் புலியைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த சிவனின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிய கேரள அரசு, அந்தப் புலியைப் பிடிக்கக் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆதரவற்ற முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை!