நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரியத்தில் சுமார் 25 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டடம் செயல்படுத்துவதற்காக ஓராண்டுக்கு முன் ரூ. 53 கோடி மதிப்பில் பூமிபூஜை போடப்பட்டது. பின்னர் இதனை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தன.
தற்போது புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வெலிங்டன் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : டாஸ்மாக் ஊழியர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி