நீலகிரி அடுத்த குன்னூர் அருகே உபதலை ஆலோரைப்பகுதியில் வசித்து வருபவர், ஜோதிமணி. இவரது கணவர் மோசஸ் மனோகரன், இவர்களின் அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் எஸ்தர் என்பரிடம் சுய உதவிக்குழு கடன் சம்பந்தமாக வரவு செலவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று எஸ்தரின் வீட்டிற்குச்சென்ற ஜோதிமணி வீடு திரும்பாததால் அவரது கணவர் மோசஸ் மனோகரன் அருவங்காடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் வீட்டின் அருகே இருந்த பழைய மாட்டு கொட்டகை அருகே தலையில் ரத்தக்காயங்களுடன் ஜோதிமணியின் உடல் கிடப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த அருவங்காடு காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து எஸ்தர் மற்றும் அவரது உறவினர் மணி ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க:காவல் நிலையத்தில் போலீசையே மிரட்டிய சரித்திரப்பதிவேடு குற்றவாளியின் கூட்டாளி