நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைக் காலம் என்பதால் கடும் வெயிலின் தாக்கத்தால் வனங்கள் வறண்டு காணப்படுகின்றன. குன்னூர் அருகே உள்ள பாலகொலா, டெண்டில் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பளவில் தீ பரவியிருக்கிறது.
மேலும், குடியிருப்புப் பகுதிகள் இருந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதனால் பல ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியில் உள்ள அரிய வகை செடிகள், அரியவகை தாவரங்கள் எரிந்து நாசமாகின.
மேலும் தீ பரவாமல் இருக்க பல இடங்களில் தீ தடுப்பு கோடுகளும் அமைக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வனங்களில் தீ மூட்டி உணவு சமைப்பது மற்றும் சில சமூக விரோதிகள் வனங்களுக்கு தீ மூட்டுவதால் மரங்கள் உள்ளிட்ட அரியவகை தாவரங்கள் எரிந்து நாசம் ஆவதுடன் வனவிலங்குகளும் உயிரிழக்க நேர்கிறது.
எனவே வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் வனங்களில் தீ மூட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளனர்
இதையும் படிங்க: 'கறை நல்லது’ - குன்னூரில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி