ETV Bharat / state

குன்னூரில் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் - வனத்துறை - Elephant

நீலகிரி: குன்னூரில் காட்டு யானைகள் அடிக்கடி சாலையை கடந்துச் செல்வதால் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களிடம் வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

குன்னூரில் சாலை கடக்கும் காட்டு யானைகள்  காட்டு யானைகள்  Wild Elephants crossing the road at Coonoor  Elephant Problem In Coonoor  காட்டு யானைகள் அட்டகாசம்  Elephant  Wild Elephants crossing the road
Wild Elephants crossing the road
author img

By

Published : May 22, 2020, 4:49 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் படையெடுத்து வந்துள்ளன. இவை, மலை ரயில் பாதை, பழங்குடியினர் வசிக்கும் கிராமம், சாலையோரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குரும்பாடி அருகே குட்டியுடன் காட்டு யானைகள் உணவுக்காக சாலையை கடந்தன. அப்போது, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகள் செல்ல வழிவகை ஏற்படுத்தினர்.

சாலையை கடக்கும் காட்டு யானைகள்

இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து சீரானது. தற்போது பலாப்பழ சீசன் தொடங்கிய நிலையில் காட்டு யானைகள் அடிக்கடி சாலையை கடந்துச் செல்வதால் ஓட்டுநர்கள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:வெயில் காலத்தில் வெளுத்து வாங்கிய மழை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.