ETV Bharat / state

நீலகிரியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி - நீலகிரி

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மின்சாம் தாக்கி 6 வயது ஆண் காட்டு யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் மின்சாரம் தாக்கி காட்டுயானை பலி

author img

By

Published : Sep 23, 2022, 11:49 AM IST

நீலகிரி: பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை சுற்றி திரிந்து வந்தது. சுமார் 6 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் காட்டு யானை நேற்று இரவு அங்குள்ள எஸ்டேட்டிற்குள் வந்து பாக்கு மரத்தை இழுத்து சாய்த்துள்ளது. அப்போது அந்த பாக்கு மரத்தை வளைத்துள்ளது. இதனையடுத்து மின்கம்பி அறுந்து விழுந்து யானையின் உடலில் மின்சார பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக பிதர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மின்சார இணைப்பை நிறுத்தி அங்கு வந்த வனச்சரகர் (பொறுப்பு) அய்யனார், வனவர்கள் ஜார்ஜ் பிரவீன்சன், பெலிக்ஸ், வன காப்பாளர் மில்டன்பிரபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.

நீலகிரியில் மின்சாரம் தாக்கி காட்டுயானை பலி

வனத்துறையினர் ஆய்வு செய்யும் போது உணவு தேவைக்காக மரத்தை சாய்க்கும் போது மின்சாரம் பாய்ந்து யானை இறந்தது உறுதியானது. அதனைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக திட்டகள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் மாவட்ட வனஅலுவலர் (பொறுப்பு) வித்தியா, பந்தலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார் ஆகியோர் அங்கு வந்து யானையை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி கால்நடை டாக்டர்கள் ராஜேஸ்குமார், லாவண்யா, சரண்யா ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் காட்டு யானையின் உடல் அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

இதையும் படிங்க: செங்கம் அரசு மருத்துவமனை பின்புறம் அடையாளம் தெரியாத பெண் எலும்புக்கூடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.