வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தில 7 வார்டுகள் உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த வாரியத் தேர்தலில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 7 வார்டுகளுகளையும் அதிமுக கைப்பற்றியது. வாரியத்தின் துணைத் தலைவராக பாரதியார் உள்ளார்.
இந்தச் சூழலில் கடந்த ஆண்டில், பதவிக்காலம் இவர்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் (பிப். 10) இவர்களின் பதவிக்காலம் நிறைவு பெறும் நிலையில், நேற்று (பிப். 09) வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தின் துணைத்தலைவர் பாரதியார், வார்டு உறுப்பினர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து துணைத் தலைவர் பாரதியார் பேசியதாவது:
கன்டோன்மென்ட் வாரியத்தில் கட்டட வரன்முறை சட்டத்தை பொறியாளர் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி நடத்த வேண்டிய சிறப்பு போர்டு கூட்டத்தை மீண்டும் நடத்தவும் வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நியமன உறுப்பினர் மூலம் கள ஆய்வு நடத்தியதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், ஏழை மக்கள் கிணறு அமைக்க அனுமதி வழங்காத நிலையில், பணம் படைத்தவர்களுக்கு கிணறு அமைக்கவும், கட்டடங்கள் கட்டவும் அலுவலர்கள் உடந்தையாத உள்ளதாக உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து நடத்திவரும் இந்தப் போராட்டத்திற்கு அதிமுக நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் முதன்மை நிர்வாக அலுவல் பூஜா.பி. பலிச்சா கூறுகையில், “நியமன அலுவலர்கள் கூட்டம் நடப்பதால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கிறோம். பொறியாளரின் கடிதத்திற்கு பிறகு முடிவு தெரியும்” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் இபிஎஸ் ஆ... இல்ல ஓபிஎஸ் ஆ... பரப்புரையில் கன்பியூஸ் ஆன அமைச்சர்!