நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வனத்தில் வாழும் விலங்குகள் உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வது வழக்கமானது. இந்நிலையில், சிம்ஸ் பார்க் பகுதியில் அழிந்து வரும் பட்டியலிலுள்ள மரநாய் ஒன்று சாலையை கடக்கும் போது வாகனம் மோதி நடுரோட்டில் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மரநாயின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.