நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், சயான், வாளையார் மனோஜ் இருவரை தவிர அனைவரும் ஜாமினில் வெளியே உள்ளனர். இந்நிலையில், கேரளாவில் வாளையார் மனோஜின் தந்தை காலமானதையடுத்து ஜாமீன் வழங்க நீதிபதியிடம் முறையிடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி வடமலை, வாளையார் மனோஜுக்கு நான்கு நாள்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு மீண்டும் வரும் 28ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து அன்று சயான் உள்ளிட்ட 10 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை வழக்கு: டிச. 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!