ETV Bharat / state

நீலகிரியில் தொடங்கியது வாக்குப்பதிவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முதலாவதாக அங்கு வாக்கு செலுத்தினார்..

சட்டப்பேரவை தேர்தல்
மலை மாவட்டமான நீலகிரியில் வாக்குபதிவு துவங்கியது! மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முதலாவதாக வாக்குபதிவு செய்தார்
author img

By

Published : Apr 6, 2021, 10:01 AM IST

மலை மாவட்டமான நீலகிரியில் உதகை, குன்னூர், கூடலூர் என மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 112 பதற்றமான வாக்குச்சாவடிகளும் அடங்கும். மேலும் 868 வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களும் நேற்று (ஏப்ரல் 5) அனுப்பப்பட்டன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) காலை 7 மணி முதல் நீலகிரியில் வாக்குப்பதிவு தொடங்கியது. மேரிஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்னசென்ட் திவ்யா மாவட்ட ஆட்சியர் முதல் ஆளாக வாக்களித்தார்.

மலை மாவட்டமான நீலகிரியில் வாக்குபதிவு துவங்கியது! மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முதலாவதாக வாக்குபதிவு செய்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உதகை தொகுதியில் 2 வாக்கு இயந்திரங்களும், கூடலூர் தொகுதியில் 10 இயந்தரங்ளும் பழுது ஏற்ப்பட்டடு உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. வாக்களிக்க தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை வழங்கவில்லை என புகார் வரும்பட்சத்தில் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனையில் அனுமதித்தவர்கள் தவிர கோவிட் பாதித்தவர்கள், மாலை 6 மணி முதல் 7 மணிவரை வாக்களிக்கலாம்” என மாவட்ட தேர்தல் அலுவலரும், நீலகிரி மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

மலை மாவட்டமான நீலகிரியில் வாக்குபதிவு துவங்கியது

இதனைத் தொடர்ந்து அனிதா ரமேஷ் என்பரிடம் ஈடிவி பாரத் செய்தியாளர் தேர்தல் குறித்து பேசுகையில், “கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான் வாக்குப்பதிவு செய்துள்ளேன். என்னைபோல் அனைவரும் வாக்குப்பதிவு செய்யவேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றினார் சூப்பர் ஸ்டார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.