மறைந்த நடிகர் விவேக் குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியில் ஆரம்ப பள்ளி படிப்பை பயின்றுள்ளார். இவரது பிறந்த தேதியும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தேதியும் நவம்பர் 19 அன்று ஒரே நாளில் இருந்துள்ளது.
இது குறித்து விவேக் தனது தந்தையிடம் கூறி பிரதமர் இந்திரா காந்திக்கு தபால் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் இந்திரா காந்தியும் பதிலுக்கு விவேக்கை வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார். விவேக் ஆரம்ப கல்வி படித்த பள்ளியின் தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது அவர் கூறியதாவது, " நடிகர் விவேக் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகர் விவேக் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆரம்ப கல்வி பயின்ற பள்ளிக்கு வந்து பணியில் உள்ள ஆசியர்களை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொண்டார். பின்னர் கல்வி பயில்வதின் அவசியத்தையும் மரம் நடுவதின் அவசியத்தையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். பின்னர் நாங்கள் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்" என கூறினார்.
இதையும் படிங்க: தமிழ் திரையுலகம் திறமையான நடிகரை இழந்துவிட்டது - நடிகர் அர்ஜூன்