நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கைகாட்டி பகுதியில் நடிகர் ராதாரவிக்குச் சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டிற்கு கடந்த 10ஆம் தேதியன்று தனது உறவினர்கள் எட்டு பேருடன் அவர் வந்துள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் கோத்தகிரி வட்டாட்சியருக்குத் தகவல் தெரிவித்ததின் பேரில் வட்டாட்சியர், காவல் துறையினர் சுகாதாரத்துறையினர் சென்று ராதாரவியை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்தனர்.

அதற்கு அவர் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் அவரை 14 நாள்கள் தனிமையில் இருக்கும் படி கூறிய அலுவலர்கள் அவர் வீட்டுச் சுவரில் தனிமைப்படுத்தப்படவர்களுக்கான ஸ்டிக்கரை ஒட்டி உள்ளனர்.
இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்