நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறிகளை விவசாயம் செய்து வருகிறன்றனர். கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தீடிரென ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏற்கனவே விவசாயம் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் வீணாகியதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வெளியே சென்று விற்பனை செய்தபோது 50 ரூபாய் முதல் 60 ரூபாய் விற்கப்பட்ட கேரட் தற்போது 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.
இந்நிலையில் போதிய விலை கிடைக்காததால் பல பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்ட காய்கறிகளை விவசாயிகளே குப்பைத் தொட்டியில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறி மீன் விற்ற கேரள மீன் வியாபாரிகள்: அபராதமும்... எச்சரிக்கையும்...!