உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டப்படவுள்ளது. காதலர் தினத்தை வெளிப்படுத்தும் விதமாக ரோஜா முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிலும் சிவப்பு ரோஜாவுக்கு அதிக கிராக்கி உள்ளது.
அதேபோல் நீலகிரியில் விளையும் லில்லி,ஜெர்பரா, கார்னேஷன், கொய் மலர்களுக்கும் தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது.
இந்த வகை மலர்கள் திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் பயன்பட்டு வந்தது. ஆனால், தற்போது காதலர் தினத்திலும் இந்த மலர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இந்தப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இவ்வகை பூக்கள் தற்போது பல்வேறு வகையான பூங்கொத்துக்கள் கொடுப்பதற்கு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூரிலும் இதன் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.