ETV Bharat / state

5 கிலோ எடையுடன் விளைந்த மெகா சைஸ் முள்ளங்கி : விவசாயிகள் ஆச்சரியம்! - ஊடு பயிராத முள்ளங்கி விவசாயம்

கேரட் தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிட்ட வெள்ளை முள்ளங்கி, வழக்கத்திற்கு மாறாக 5 கிலோ எடையுடன் விளைந்துள்ளது விவசாயிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amazing radish
Amazing radish
author img

By

Published : Nov 26, 2020, 4:50 AM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதிகளில், தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. கால நிலைக்கு ஏற்றவாறு கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் என விவசாயிகள் பயிர்செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறன.

தற்போது பயிரிட்டுள்ள கேரட் பயிரின் அறுவடை காலம் 5 முதல் 6 மாதம் வரையாகும். சில விவசாயிகள் தங்களுக்கு தேவையான முள்ளங்கி, கீரைவகை, அவரை, பட்டானி உள்ளிட்ட காய்கறிகளை கேரட் தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிடுகின்றனர்.

இந்நிலையில், கேத்தி பாலாடா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது கேரட் தோட்டங்களில் ஊடு பயிராக வெள்ளை முள்ளங்கியை பயரிட்டு, அறுவடை செய்துள்ளார். நன்கு வளர்ந்த வெள்ளை முள்ளங்கிகளில் சில முள்ளங்கிகள், சுமார் 5 முதல் 6 கிலோ எடையுடன் பெரியதாக இருந்துள்ளது. அதனை கண்ட விவசாயி ஆர்ச்சர்யம் அடைந்துள்ளார்.

வழக்கமான முள்ளங்கிகளை விட பெரிதாக காணப்பட்ட அந்த வெள்ளை முள்ளங்கியை கண்டு அறுவடையில் ஈடுபட்ட தொழிலாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர்‌. இது குறித்து கூறிய விவசாயி, "வெள்ளை முள்ளங்கி விதையில் ஏற்பட்ட மரபணு மாற்றம் காரணமாக இவைகள் பெரிதாக வளர்ந்திருக்க கூடும்" என்றார். அந்த மெகா சைஸ் முள்ளங்கிகளை விற்பனைக்கு அனுப்பாமல், விவசாயி சொந்த பயன்பாட்டிற்கு கொண்டு சென்றார்.

இதையும் படிங்க: கரோனாவால் நிறுத்திவைக்கப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் - எம்எல்ஏ விஜயதரணி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.