நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள எடக்காடு நடுஹட்டியைச் சேர்ந்தவர் சரவணன். நேற்று முன்தினம் (ஆக.13) மாலை தோட்ட வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, இவர் எமரால்டு அணையில் கை கழுவ இறங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாகத் தவறி அணையில் விழுந்துள்ளார். தொடர்ந்து அவரைக் காப்பாற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜும் (45) அணையில் குதித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், சரவணன் உடலை மீட்டனர். தொடர்ந்து ராமராஜ் உடலை பரிசல் கொண்டு தேடி, எட்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இன்று (ஆக.15) மீட்டனர்.
தொடர்ந்து இருவரது உடல்களும் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், அணையின் கரையோரம் கை கழுவுதல், புகைப்படம் எடுத்தல் போன்ற செயல்களில் மக்கள் எவரும் ஈடுபட வேண்டாம் என தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.