நீலகிரி மாவட்டத்தில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகள் விதித்து, அவற்றை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், உதகை அருகே உள்ள குந்தா மின்வாரிய அலுவலகம், அதன் அருகே உள்ள காட்டு குப்பை நீர் மின்நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமலும், உடல் வெப்ப பரிசோதனை, போதிய தகுந்த இடைவெளியின்றி பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் என, மொத்தம் 20 பேருக்கு கரோனா தொற்றுப் பரவியுள்ளது. அவர்களிடமிருந்து பொதுமக்கள் பலருக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது.
அதனையடுத்து குந்தா மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று அலுவலர்கள் ஆய்வு செய்தபோது, அங்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாகக் கடைப்பிடிக்காமல் இருந்ததே தொற்றுப் பரவ காரணம் என்பது தெரியவந்தது.
கரோனா காலத்தில் அலட்சியமாகப் பணியாற்றிய ஊழியர்களை கண்டுகொள்ளாமல் இருந்ததுடன், தொற்று அதிகரிக்கக் காரணமாக இருந்ததாகக் கூறி, குந்தா நீர்மின் வாரியத்தின் செயற்பொறியாளர் திருமாலுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவின் பேரில் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கபட்டது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை: ’தனியார் மருத்துவமனைகள் நாளுக்கு ஒரு லட்சம் வரை வசூலிக்கின்றனவா...’