நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில், சமீபகாலமாக காட்டெருமைகள் அதிகமாக காணப்படுகின்றன.
தினமும் காலை நேரங்களில் காட்டெருமைகள் ஊட்டி - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில், அவ்வப்போது உலா வருகின்றன.
இந்நிலையில் குடியிருப்பு வளாகம் அருகே இரண்டு காட்டெருமைகள் முட்டி மோதிக்கொண்டன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும், வனத்துறையினர் காட்டெருமைகளை கண்காணித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி சென்ற சிறுத்தை...! வைரல் வீடியோ...!