நீலகிரி மாவட்டத்தில், கஞ்சா புழக்கம் அதிகரித்து இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குன்னூரில் கஞ்சா கொண்டு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் துணை காவல் ஆய்வாளர் ஜார்ஜ், நசீர் மற்றும் காவல் துறையினர் கண்கானித்து வந்தனர்.
அப்போது காட்டேரி அருகே கிளன்டேல் பகுதிக்கு கஞ்சா பாக்கெட்டுகள் கொண்டு சென்ற இருவரை பிடித்தனர். இவர்கள் ஆர்செடின் பகுதியை சேர்ந்த ராமன்(31), என்பதும் அருவங்காடு பாலாஜிநகரை சேர்ந்த சசிகுமார் (41) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்த பாக்கெட்களில் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அனைவருக்கும் ஒரே நேரத்தில் தகவல்கள் கிடைக்க வேண்டும் என வழக்கு: மும்பை பங்குச் சந்தை பதிலளிக்க உத்தரவு