ETV Bharat / state

குடியிருப்பு பகுதிகளில் இரட்டை புலிகள்; பொதுமக்கள் அச்சம்! - Tigers roaming in Kothagiri

நீலகிரி: கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் சுற்றித் திரியும் இரட்டை புலிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

twin-tigers-roaming-in-ooty-residential-area
twin-tigers-roaming-in-ooty-residential-area
author img

By

Published : Dec 11, 2019, 11:35 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில், கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈளாடா பகுதியில் இரட்டை புலிகள் கடந்த சில நாட்களாக சுற்றி திரிய தொடங்கி உள்ளன.

பகல் நேரங்களிலேயே வனப்பகுதியிலிருந்து வெளியில் வரும் இந்த புலிகள் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சாதாரணமாக உலா வருகின்றன. பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையிலேயே புலிகள் அடிக்கடி நடமாடுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேயிலை தொழிலாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த இரட்டைப் புலிகள் கடந்த சில தினங்களில் அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வேட்டையாடி உள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரட்டை புலிகள்

இதனால் ஈளாடா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த இரட்டை புலிகளை வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பெண்ணின் நடனத்தை மெய்மறந்து ரசித்த ஆண் சிங்கம்! வைரல் காணொலி

Intro:OotyBody:நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் சுற்றி திரியும் இரட்டை புலிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்….
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில் கோத்தகிரியிலிருந்த கொடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈளாடா பகுதியில் இரட்டை புலிகள் கடந்த சில நாட்களாக சுற்றி திரிய தொடங்கி உள்ளன. பகல் நேரங்களிலேயே வனபகுதியிலிருந்து வெளியில் வரும் இந்த புலிகள் தேயிலை தோட்டங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளிலும் சாதாரணமாக உலா வருகின்றன.
பொதுமக்கள் நடந்த செல்லும் சாலையில் இந்த புலிகள் அடிக்கடி நடந்து செல்வதால் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேயிலை தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த புலிகள் கடந்த சில தினங்களில் மட்டும் அப்பகுதியில் ஆடு, மாடுகளை வேட்டையாடி உள்ளன. இதனால் ஈளாடா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த இரட்டை புலிகளை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும், அடர்ந்த வனபகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பேட்டி: குமார் - ஈளாடாConclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.