மெட்ராஸ் ராணுவப் பிரிவில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தின சிறப்பு வழிபாடு கூட்டம் வெலிங்டனில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அனுசரிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமான ஜனவரி 30ஆம் தேதிக்கு அடுத்துவரும் முதல் ஞாயிறன்று தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு கூட்டம் ராணுவ அலுவலர்களால் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்தச் சிறப்பு வழிபாடு கூட்டம் நாட்டிற்காக போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவர்களின் வீரத்தை நினைவுகூரும்விதமாகவும் அனுசரிக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் ராணுவ அலுவலர் தேவாலய முறைப்படி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இக்கூட்டத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மதிநுட்பத்தால் வெற்றிகண்ட திருவிதாங்கூர் படைகள்!