ETV Bharat / state

அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க பழங்குடியின மக்கள் கோரிக்கை - அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நீலகிரி: குன்னூர் அருகே வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களது கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை விரைந்து முடித்துத் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

tribles
tribles
author img

By

Published : Nov 3, 2020, 8:47 AM IST

இந்தியா முழுவதும் பழங்குடியின மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அவ்வாறு ஒதுக்கப்படும் தொகையைக் கொண்டு பஞ்சாயத்து நிர்வாகங்கள் தண்ணீர் இணைப்பு, சாலை வசதி, சமுதாயக் கூடம் என பழங்குடியின கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன.

அந்த வகையில், குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட செங்கல்புதூர், பம்பலக்கோம்பை, சின்னாலக்கோம்பை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்காக பல்வேறு திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தண்ணீர் கிணறு, சமுதாயக் கூடம் போன்ற திட்டங்களில் செங்கல்புதூரில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை எவ்விதப் பணிகளும் தொடங்கப்படவில்லை. சமுதாயக் கூடம் அமைக்கும் பணிக்கு 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் அனைத்தும் பாதியிலேயே முடங்கியுள்ளன.

இதனால், பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்துத் தர வேண்டும் என பழங்குடியின மக்கள் நேற்று (நவ.2) உலிக்கல் பஞ்சாயத்தில் மனு அளித்து சென்றனர்.

இதையும் படிங்க: மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.