நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுகர், கோத்தர், தோடர் இன மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். மலை கிராமங்களில் வசித்து வரும் தோட்டதொழிலாளர்களும் வாக்களித்தனர்.
குறிப்பாக உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் வாழ்ந்து வரும் படுகர்,கோத்தர் மற்றும் தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையான வெள்ளை நிற உடைகளை அணிந்தபடி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்றனர்.
இதில் 80 வயதை கடந்த மூதாட்டிகள் முதற்கொண்டு தள்ளாத வயதினரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. இதையடுத்து மொத்தமுள்ள 868 வாக்குச்சாவடிகளில் தற்போதுவரை அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தேர்தல் நாள்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை