நீலகிரி: அரபிக் கடலில் உருவான 'டவ் டே' புயல் காரணமாக தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில், நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை, குன்னூர் - ஊட்டி சாலையில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினரையிருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், சாலையில் சரிந்திருந்த மரங்களை வெட்டி அகற்றினர். பின்னர், போக்குவரத்து சீரானது. சாரல் மழை காரணமாக அப்பகுதியில் கடுங்குளிரும் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் பலி’