நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில்,பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருவதால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் ரயில்வே துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும்,குன்னூர் சலாம் காலனி,ரயில்வே குடியிருப்பு,மோர்ஸ்கார்டன் போன்ற பகுதிகளில் விழுந்த மரங்களால் ஐந்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள நான்கு கிராமங்களுக்கு மின்சாரம் முழுமையாக தடைபட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சேதமடைந்த மின்கம்பங்களை போர் கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.