ETV Bharat / state

காயத்தோடு சுற்றிய காட்டு யானை! - மயக்க ஊசி செலுத்தி 3 மணி நேரம் சிகிச்சை! - மயக்க ஊசி செலுத்தி 3 மணி நேரம் சிகிச்சை

உதகை: பொக்காபுரம் குடியிருப்பு பகுதிக்குள் காயத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

elephant
elephant
author img

By

Published : Dec 28, 2020, 2:58 PM IST

உதகை அருகேயுள்ள பொக்காபுரம் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக முதுகில் பலத்தக் காயத்துடன் ஆண் காட்டு யானை ஒன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் சுற்றி வந்தது. இதனால் காயம் குணமாக பழங்களில் மாத்திரைகளை வைத்து சிங்காரா வனத்துறையினர் யானைக்கு சாப்பிட கொடுத்து வந்தனர். ஆனாலும், காயம் குணமாகாமலேயே இருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் மசினகுடி குடியிருப்பு பகுதிக்குள் அந்த யானை புகுந்து, அங்குள்ள விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வந்தது. எனவே, காயமடைந்த காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 9 மணிக்கு பொக்காபுரம் அருகே உள்ள வனப்பகுதியில், காயமடைந்த யானையை கண்டறிந்து, சுஜய் மற்றும் வசிம் ஆகிய இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு கால்நடை மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர்.

காயத்தோடு சுற்றிய காட்டு யானை! - மயக்க ஊசி செலுத்தி 3 மணி நேரம் சிகிச்சை!

பின்னர், யானையின் கால்களை ராட்சத கயிறு கொண்டு கட்டியபின், கும்கி யானை மீது ஏறி மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 3 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் யானைக்கு கயிறுகள் அகற்றப்பட்டன. வேறு யானையுடன் சண்டையிட்டோ, அல்லது மரத்தின் மீது மோதியோ யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், ஆழமான காயம் என்பதால் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், குடியிருப்புக்குள் யானை வரமால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.