ETV Bharat / state

சுற்றுலா சென்ற  கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலி

நீலகிரி : ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனங்களில் ஒன்று கர்நாடக அரசு பேருந்து மீது  நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

சுற்றுலா சென்ற  கல்லூரி மாணவர்கள் விபத்தில் மரணம்
author img

By

Published : Jun 16, 2019, 7:32 PM IST

கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 11 பேர் நேற்று ஆறு இரு சக்கர வாகனங்களில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியான சோதனை சாவடிக்கு இவர்கள் வந்தபோது பணியில் இருந்த காவல்துறையினர் கல்லூரி மாணவர்களிடம் ஹெல்மெட் போட சொல்லி எச்சரித்துள்ளனர். சிறிது தூரம் ஹெல்மெட் அணிந்து சென்ற மாணவர்கள் பின்னர் அதனைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டனர்.

சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் விபத்தில் மரணம்

இந்நிலையில், ஒரு பைக்கில் கோகுல்(21), சோமன்னா (21) என்ற மாணவர்கள் முதுமலை மணல் சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது , வளைவின் முன்னால் சென்ற காரை முந்திச் சென்றனர், அப்போது எதிரே வந்த கர்நாடக அரசு பேருந்து மீது மோதி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த மசினகுடி இன்ஸ்பெக்டர் சரவணன் , இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மசினகுடி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். இருவரையும் பரிசோதித்த மருத்துவர், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

மசினகுடி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து இருவரது உடலையும் உடற்கூறாய்வுக்காக கூடலூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Intro:முதுமலை அருகே பைக்கும் கர்நாடக அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் மரணம் அடைந்தனர்.Body:கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 11 பேர் நேற்று 6 இரு சக்கர வாகனங்களில் ஊட்டி சுற்றுலா புறப்பட்டனர்.
தமிழக எல்லையான கக்கனல்லா சோதனை சாவடிக்கு இவர்கள் வந்த போது அங்கு பணியில் இருந்த போலிசார் கல்லூரி மாணவர்களிடம் ஹெல்மெட் போட சொல்லி எச்சரித்தனர் சிறிது தூரம் ஹெல்மெட் அணிந்த மாணவர்கள் பின்னர் கலற்றி கையில் வைத்துக் கொண்டனர். முதுமலை மணல் சாலை அருகே ஒரு பைக்கில் இருந்த கோகுல் 21 மற்றும் சோமன்னா 21 ஆகியோர் வளைவில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த ஒரு காரை முந்தி சென்றனர் அப்போது எதிரே வந்த கர்நாடக அரசு பஸ் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர் மசினகுடி இன்ஸ்பெக்டர் சரவணன் உதவி ஆய்வாளர் விஜயன் ஆகியோர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மசினகுடி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு பரிசோதித்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
மசினகுடி போலிசார் வழக்கு பதிவு செய்து இருவரது உடலையும் உடற்கூறு ஆய்வுக்காக கூடலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.Conclusion:கல்லூரி முடித்த குஷியில் சுற்றுலா வந்த இரு மாணவர்கள் ஹெல்மட் அணியாமல் சாலை விபத்தில் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.