கரோனா அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுவதால் வனவிலங்குகள் ஊருக்குள்ளும் சாலைகளில் உலாவருவது அதிகரித்து உள்ளது.
இதனையடுத்து குன்னூர் அருகே உள்ள மட்டகண்டி பகுதியில் குடியிருப்புக்கு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள கம்பி வேலியில் 9 வயதுடைய சிறுத்தை குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனே வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் விரைந்துவந்து கம்பி வேலியில் சிக்கிக்கொண்ட சிறுத்தையை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டெடுத்தனர். அதன் பின் அந்தச் சிறுத்தையை அடர் வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.