ETV Bharat / state

நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த 15 சுற்றுலாப் பயணிகள் - அரளவைக்கும் வாடகைத்தொகை! - Nilgiris Hill Train

நீலகிரியில் நீராவி மலை ரயிலை வாடகை கொடுத்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 15 சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 12, 2022, 8:42 PM IST

நீலகிரி: மலை ரயிலை தனியார் வாடகைக்கு அமர்த்தி பயணம் செய்ய தென்னக ரயில்வே நிர்வாகம் மூன்றாண்டுகளுக்கு முன்பு அனுமதி அளித்தது. இதனைத் தாெடர்ந்து பல்வேறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து, ரஷியா, அர்ஜென்டினா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கடந்த காலங்களில் மலை ரயிலை வாடகை்கு எடுத்து பயணித்தனர்.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இன்று மலை ரயில் மூலம் வருகை தந்த மும்பை, டெல்லி,
ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து 15 பேர் மட்டுமே மலை ரயில் பயணத்தை மேற்கொண்டனர்.

நீலகிரி நீராவி இன்ஜினின் பெருமை உலக அளவில் தெரியவரும் என்பதாலும், எதிர்வரும் காலங்களில் உள்ளூர் மற்றும் வெளி நாட்டினர் இந்த ரயில் பயணம் மேற்காெள்ள வாய்ப்புள்ளதாக அமையும் என்பதாலும் தெற்கு ரயில்வே இது போன்று தனியாருக்கு வாடகைக்கு விடும் நடைமுறையை ஊக்கப்படுத்தும் விதமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அமையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதம் ஏன்? ஆர்டிஐ-யில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.