நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலாத்தலங்களில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் முதல்கட்ட சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரண்டாம் கட்ட சீசனும் தொடங்கும்.
முதல்கட்ட சீசனில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவார்கள். அப்போது சுற்றுலாத் துறை சார்பாக கண்காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
தற்போது கோடை சீசனுக்காக பூங்கா பொழிவுபடுத்தப்பட்டுள்ளது. மழையின் சீற்றம் குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் கூட்டம், குன்னூர் சுற்றுலாத் தலங்களில் அலைமோதிவருகிறது. மேலும், குன்னூர் டால்பின் நோஸ், லேம் ஸ்ராக் ஆகிய இடங்களில் இயற்கைக் காட்சியை ரசிக்கவும், இதமான கால நிலையை அனுபவிக்கவும், சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக, வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த பெண்மணி