ETV Bharat / state

காழ்ப்புணர்ச்சியால் சொத்துக்குவிப்பு வழக்குகள் - ஆ.ராசா குற்றச்சாட்டு

தூய்மை இந்திய திட்டத்தில் மோடி அரசு நாடு முழுவதும் கட்டி உள்ள கழிப்பறைகளில் 80% கழிப்பறைகள் பயன்படுத்தபடாமல் இருப்பதாக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றம்சாட்டினார்

தூய்மை இந்தியா திட்டத்தில் 80% கழிப்பறைகள் பயன்படுத்தபடாமல் உள்ளது

author img

By

Published : Oct 17, 2022, 4:41 PM IST

நீலகிரி: பாராளுன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா இன்று உதகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, பிரதமர் மோடி நாட்டில் கோவில்களை விட அதிகமாக கழிப்பறைகள் கட்டி உள்ளதாக பெருமையாக கூறுவதாகவும், ஆனால் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்படுத்த போதிய தண்ணீர் இல்லை என்றும் மக்களிடையே கழிப்பறையை பயன்டுத்துவது குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும், இதனால் 80% கழிவறைகள் பயனற்று இருப்பதாக தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஆ.ராசாவிடம் சிபிஐ புதிதாக 5.53 கோடி சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து கேட்ட போது, ஏற்கனவே அமலாக்க துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் 2ஜி வழக்கின் போதே அந்த சொத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டதாக கூறினார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் 80% கழிப்பறைகள் பயன்படுத்தபடாமல் உள்ளது

தொடர்ந்து மத்திய அரசு மற்றும் அதனுடைய கொள்கைகளை விமர்சித்து வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அமலாக்கத்துறையை வைத்து புதிதாக சொத்து குவிப்பு தொடர்ந்துள்ளதாக அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீலகிரி மலை ரயிலுக்கு புதிய என்ஜின் - பொன்மலை ரயில் பணிமனை சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.