ETV Bharat / state

திமுக-வின் ஸ்டிக்கர்கள், பதாகைகளை பறக்கும்படை பறிமுதல்!

நீலகிரி : குன்னூர் பர்லியார் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட திமுக-வினரின் ஸ்டிக்கர்கள், பதாகைகள் ஆகியவற்றை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

conoor
author img

By

Published : Apr 6, 2019, 8:10 PM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில், தேர்தல் ஆணையத்தின் சர்வே குழு அதிகாரி ஜெயஸ்ரீ தலைமையிலான அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

பறக்கும்படை சோதனை

அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சம் மதிப்பிலான திமுக-வின் ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் உடனடியாக லாரியுடன் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்த லாரி குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Intro: நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில்   தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது  அவணங்களின்றி தி.மு.க-வினர் 3 லட்சம் மதிப்பிலான பிரச்சார ஸ்டிக்கர்கள், பதாதைகள் மூட்டை மூட்டையாக லாரியுடன் பரி முதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே பர்லியார் சோதனை ச்சாவடி பகுதியில் தேர்தல் ஆணையத்தின் 2ம் பிரிவு சர்வே குழு அதிகாரி ஜெயஸ்ரீ தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரியை சோதனை செய்த போது, அதில் எந்த வித உரிய ஆவணங்கள் இல்லாமல் மூட்டை மூட்டையாக தி.மு.க.,வின் பேனர்கள், ஸ்டிக்கர்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் குன்னூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி, வேறு ஏதேனும் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Body: நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில்   தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது  அவணங்களின்றி தி.மு.க-வினர் 3 லட்சம் மதிப்பிலான பிரச்சார ஸ்டிக்கர்கள், பதாதைகள் மூட்டை மூட்டையாக லாரியுடன் பரி முதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே பர்லியார் சோதனை ச்சாவடி பகுதியில் தேர்தல் ஆணையத்தின் 2ம் பிரிவு சர்வே குழு அதிகாரி ஜெயஸ்ரீ தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லாரியை சோதனை செய்த போது, அதில் எந்த வித உரிய ஆவணங்கள் இல்லாமல் மூட்டை மூட்டையாக தி.மு.க.,வின் பேனர்கள், ஸ்டிக்கர்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. உடனடியாக லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் குன்னூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி, வேறு ஏதேனும் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.